நீலகிரி: குன்னூர் உமரி காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த எழிலரசன் (31), எம்ஜிஆர் நகரை சேர்ந்த யுவராஜ் (20) ஆகிய இருவரும் குடிபோதையில் இருந்ததுடன், அந்தோனியார் தேவாலயம் நடைபாதை பகுதியில் அவ்வழியாக சென்ற சேலாஸ் சின்ன கரும்பாலம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டனர்.
இதில் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து குன்னூர் காவல் நிலையத்தில் கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், இரு இளைஞர்களையும் கைது செய்தனர். இருவரும் கோபாலகிருஷ்ணனை தாக்கியதும், அவரிடம் பணம் ஏதும் இல்லாததால் கையிலிருந்த செல்போனை பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.