சென்னை: சாலிகிராமம் மாந்தோப்பு பகுதியில் காலி மைதானம் ஒன்று உள்ளது. அங்கு தினமும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் வாடிக்கையாக விளையாடி வந்துள்ளனர்.
நேற்று (ஜுன் 22) மாலை வழக்கம்போல், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கபடி விளையாடி கொண்டிருந்தபோது, மைதானத்தின் ஒரு மரத்தடியில் இரண்டு வெடிகுண்டுகள் இருந்ததைக் கண்டு உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
யார் வைத்த குண்டுகள்?
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அங்கிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். காலி மைதானத்தில் வெடிகுண்டுகளை வைத்து சென்ற நபர் யார்? எதற்காக வைக்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வெடிகுண்டுகள் கைப்பற்றபட்ட இடத்தில் தற்போது காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிக்க வைக்கும் முயற்சி
இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டுகளை கைப்பற்றி சாலிகிராமம் என்ஜிஓ காலனியில் உள்ள காலி இடத்தில் வைத்து வெடிக்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையன்: டெல்லி அழைத்துச் சென்று விசாரணை!