ETV Bharat / crime

நண்பனை கொடூரமாக தாக்கிய இருவர் கைது - கிரைம் செய்திகள்

கொலை செய்ய முயன்ற நண்பனின் கத்தியை பிடுங்கி அவரை வெட்டி, தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தாக்கப்பட்ட வீடியோ
தாக்கப்பட்ட வீடியோ
author img

By

Published : Aug 15, 2021, 12:03 PM IST

சென்னை: தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள ரேசன் கடையின் பின்புறம், கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று அஜய் என்ற பம்பு (24) அவரது நண்பர் சந்தோஷ்(22) ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், திடீரென அஜய், தான் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷை வெட்டியுள்ளார்.

சுதாரித்துக்கொண்ட சந்தோஷ் அஜய்யின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அஜய்யை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து சந்தோஷ் தனது நண்பரான சேகரிடம் தெரிவித்தார்.

தலையில் கல்லை போட்ட நண்பர்

சந்தோஷ் வெட்டியதில், படுகாயமடைந்த அஜய்யை அருகிலிருந்த அவரது உறவினர்கள் கட்டிப்பிடித்து அழுது கொண்டு இருக்கும் போது சந்தோஷின் நண்பரான சேகர் கோபத்தில் பெரிய கல்லை எடுத்து வந்து உயிருக்கு போராடி வந்த அஜய்யின் முகத்தில் போட்டார்.

இதில் பலத்த காயமடைந்த அஜய்யை அருகிலிருந்த நபர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்த புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, அஜய்யை கொலை செய்ய முயன்ற சந்தோஷ், சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கல்லை போட்டு கொலை செய்ய முயலும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: காந்தியின் கனவுகளை இன்றும் சுமக்கும் தே கல்லுப்பட்டி ஆசிரமம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.