ETV Bharat / crime

நெல்லையில் பயங்கரம்... நிலத்தகராறில் ஓட ஓட அரிவாள் வெட்டு...  மூன்று பேர் மரணம்..

திருநெல்வேலியில் நிலத்தகராறு காரணமாக பெண் உள்பட மூன்று பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி
திருநெல்வேலி
author img

By

Published : Apr 17, 2022, 7:40 PM IST

Updated : Apr 17, 2022, 8:05 PM IST

திருநெல்வேலி மாவட்டம் தாழையுத்து அருகே உள்ள நாஞ்சான் குளம் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவருக்கும் நிலத்தகராறு இருந்துவருகிறது. இந்த நிலையில், ஜேசுராஜ் இன்று (ஏப். 17) தனது நிலத்தில் போர்வெல் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை செய்துகொண்டிருந்தார்.

அவருடன் தங்கை வசந்தா, தம்பி மரியாஜ் உள்ளிட்ட ஐந்து பேர் இருந்தனர். அப்போது, அங்கு வந்த அழகர்சாமி மற்றும் அவரது ஆட்கள், ஜேசுராஜ் உள்பட ஐந்து பேரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் தாக்கினர். இந்த சம்பவத்தில் 5 பேருமே படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜேசுராஜ், அவரது தம்பி மரியாஜ், சகோதரி வசந்தா மூன்று பேரும் உயிரிழந்தனர்.

மற்ற இருவருக்கும் பாளையங்கோட்டை அரசு மருத்துமனை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் சம்பவ இடத்தில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணன் தங்கை உறவு என்பதால் எதிர்ப்பு; உயிரிழந்த காதலி.. உதவிக் கேட்ட காதலன்!

Last Updated : Apr 17, 2022, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.