சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மலை சேர்ந்த பஷீர் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று(ஜூன்.29) மதியம் வங்கியில் இருந்து மூன்று லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு அவரது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதையடுத்து பல்லாவரம் பகுதி டிரங்க் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, அங்கிருந்த குளிர்பான கடைக்குச் சென்று குளிர்பானம் குடித்து விட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
வீட்டிற்கு சென்ற பின்னர் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை எடுக்கச் சென்றச் போது, அதில் இருந்த பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையம் சென்று அவர் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அடையாளம் தெரியாத 3 பேர் பணத்தை வாகனத்தில் இருந்து திருடி செல்வது தெறியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பேற்பு