திருப்பூர்: நெருப்பெரிச்சல் பகுதியில் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. நேற்று (பிப்.27) காலை உரிமையாளர் கடையை திறந்தபோது, அங்கு இருந்த 6,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதேபோல் அருகே உள்ள அரிசி மண்டியில் மேற்கூரையை பிரித்து 8 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜி.என் கார்டன், வாவி பாளையம் பகுதிகளில் உள்ள 3 கடைகளில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணமும், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
கடைகளில் உள்ள கண்காணிப்பு கருவி உதவியுடன் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.