மயிலாடுதுறை: சீர்காழி அருகே மணல்மேடு ஆத்தூர் கேசிங்கன் பகுதியை சேர்ந்தவர் சண்முகப்பிரியா (36). இவர் வக்கரமாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மூன்று நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், சீர்காழியில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சண்முகப்பிரியா நேற்று (ஆகஸ்ட் 19) இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது வைத்தீஸ்வரன்கோயில் அருகே அட்டகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து இருசக்கரவாகனத்தில் சென்ற இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் சண்முகப்பிரியா அணிந்திருந்த ஏழு பவுன் தங்க தாலிசெயினை அறுத்துவிட்டு தப்பிசென்றனர்.
இச்சம்பவத்தில் நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்த ஆசிரியர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் சண்முகபிரியாவை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வைத்தீஸ்வரன்கோயில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து செயின்பறித்து தப்பிய அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்... 5 பேர் கைது