ETV Bharat / crime

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு! - Hindu Religious and Charitable Endowments Department

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இந்துசமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
author img

By

Published : Feb 3, 2022, 3:25 PM IST

சென்னை: “திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, இவற்றை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரி சேவியர் பெலிக்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கான மின் இணைப்பை துண்டிக்கவும், நியாயமான வாடகையை நிர்ணயிக்கவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அமல்படுத்தாத கோயில் செயல் அலுவலர்களுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின்படி, நடவடிக்கைகள் எடுக்காமல் ஆக்கிரமிப்பை ஊக்குவித்தது கோயில் நிர்வாகம் தான் எனவும், கோயில் நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய செயல் அலுவலர்கள், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து செயல்படுகிறது. கடமையைச் செய்வதற்கு தான் செயல் அலுவலருக்கும், ஆணையருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறதே தவிர, ஏசி அறையில் இருக்க அல்ல. செயல்படாத இவர்களின் ஊதியத்தை ஏன் பிடிக்க கூடாது?.

கோயில் நிலத்தில் உள்ள 1,640 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல் அலுவலர்களின் செயல்பாட்டை அறநிலையத் துறை ஆணையர் கண்காணிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத செயல் அலுவலரை உடனடியாக அங்கிருந்து மாற்ற வேண்டும். 2014ஆம் ஆண்டு முதல் கோயில் செயல் அலுவலர்களாக பணியாற்றியவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிடப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளின் விவரங்களும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த விசாரணை இரு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.