கரூர்: தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துவந்த பள்ளி மாணவி, நேற்று (நவம்பர் 20) மாலை 6 மணியளவில் தனது வீட்டில் யாரும் இல்லாதபொழுது கதவைத் தாழிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளியில் படித்துவந்த 17 வயது மாணவியின் தந்தை சில நாள்களுக்கு முன் மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து மாணவியின் பாட்டியும் இயற்கை எய்தியுள்ளார். இதன் காரணமாக மாணவி மிகுந்த மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவியின் டைரி - தொடரும் விசாரணை
இச்சூழலில், நேற்று (நவம்பர் 19) மாலை 6 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது தாய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
![school student suicide, karur news, suicide news, school girl suicide, twelfth standard girl suicide, பள்ளி மாணவி தற்கொலை, மாணவி தற்கொலை, கரூர் மாணவி தற்கொலை, கரூர் தற்கொலை, தற்கொலை செய்திகள், கரூர் செய்திகள், கரூர் மாவட்ட செய்திகள், பள்ளி மாணவி மரணம், karur 12th School Student Suicide, Sexual harassment, karur 12th School Student Suicide, Sexual harassment, பாலியல் தொல்லையால் தற்கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13685462_sexual-harassment-karur-12th-school-student-suicide.jpg)
தற்கொலை செய்துகொண்ட மாணவி நாள்தோறும் டைரி எழுதும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இறப்பதற்கு முன்பு அவர் தனது டைரியில் பாலியல் தொல்லையால் இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த டைரியைக் கைப்பற்றியுள்ள காவல் துறையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி: தம்பதி கைது