விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த மார்க்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (32) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தப் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஏற்கனவே 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.