ETV Bharat / crime

வருவாய் துறையினர் துணையுடன் ஏரிகளில் மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்கக்கோரி மனு! - natural resources theft in dharmapuri

வருவாய் துறையினர் ஆசியுடன் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள ஏரிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

dharmapuri, ஏரிகளில் மண் கடத்தல், தர்மபுரி செய்திகள், dharmapuri news, மண் கடத்தல், sand theft dharmapuri, natural resources theft in tamilnadu, natural resources theft in dharmapuri, sand theft in dharmapuri
sand theft in dharmapuri
author img

By

Published : Jun 9, 2021, 9:27 PM IST

தர்மபுரி: கடத்தூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட தாளநத்தம் ஊராட்சியில் நொச்சிக்குட்டை, அய்யம்பட்டி, காவேரிபுரம், நடூர், தாளநத்தம், குண்டல்மடுவு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் நொச்சிக்குட்டை அருகே ரெட் ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியில், மழைக் காலங்களில் பெய்யும் மழை, நரசிம்மசாமி மலையில் இருந்து வருகின்ற தண்ணீர் ஆகியவை தேங்கி நிற்கும். அவ்வாறு நிற்கும்போது சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் கிணறுகளில் தண்ணீர் ஊற்றெடுக்கும். இதனால் விவசாயம் செழிக்கும்.

dharmapuri, ஏரிகளில் மண் கடத்தல், தர்மபுரி செய்திகள், dharmapuri news, மண் கடத்தல், sand theft dharmapuri, natural resources theft in tamilnadu, natural resources theft in dharmapuri, sand theft in dharmapuri

இந்நிலையில், இந்த ஏரியில் தற்போது மழை பெய்தாலும், தண்ணீர் தேங்குவது இல்லை. வருவாய்த் துறையினரின் ஆசியோடு ஏரியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பொக்லைன் மூலம் மண் அள்ளப்பட்டு டிராக்டரில் கடத்தி விற்கப்படுகிறது. சிலர் மணல் கடத்தலை தொழிலாகவே செய்து வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி தாலூகாவுக்குள்பட்ட பகுதிகளில் வருவாய் துறையினரின் ஆசியுடன் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் பகுதியிலுள்ள ஏரிகளில் மண், மணல் நரம்பு உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், வருவாய் துறை அலுவலர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு இதுகுறித்து கண்டு கொள்வதில்லை என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.