ராமநாதபுரம்: ஓய்வுபெறும் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் அலகு ஜி பிரிவு அலுவலக உதவியாளராக இருந்தவர் தசரதராமன்(60). ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் நலசங்க மெட்ரிக் பள்ளி நிதி ரூ. 9 மோசடி செய்த வழக்கில் இவர் 7ஆவது நபராக காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தக் குற்ற வழக்கு தொடர்பாக பெறப்பட்ட புகாரின்படி ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தசரதராமன் ஜூன் 23ஆம் தேதி விளக்கம் அளித்தார். இச்சூழலில் ஜூன் 30ஆம் தேதி தசரத ராமன் ஓய்வுபெற இருந்த நிலையில், தசரதராமனை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.