ETV Bharat / crime

PSBB school பாலியல் வழக்கு: ராஜகோபாலனின் நண்பர்களை விசாரிக்க முடிவு! - ஆசிரியர் ராஜகோபாலன்

சென்னை கே.கே. நகர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு நெருங்கிய நண்பர்கள் யார் யார்? என்ற பட்டியலை எடுத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள காவல் துறை திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்பிபி பள்ளி பாலியல் வழக்கு
பிஎஸ்பிபி பள்ளி பாலியல் வழக்கு
author img

By

Published : May 27, 2021, 2:59 PM IST

Updated : May 28, 2021, 2:43 PM IST

சென்னை: கே.கே.நகரில் இயங்கிவரும் பிஎஸ்பிபி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது, மேலும் பல மாணவிகள் காவல் துறையினரிடம் புகார்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்குத் தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் புகார்களை பிஎஸ்பிபி எனப்படும் பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி நிர்வாகம் புறக்கணித்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பள்ளியின் முதல்வரிடமும், தாளாளரிடமும் அசோக் நகர் காவல் நிலையத்தில் வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, தியாகராயநகர் துணை ஆணையர் ஹரிகிரண் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

சுமார் 6 மணி நேரமாக நடைபெற்ற விசாரணையில் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோரின் பதில்கள் வாக்குமூலமாகவும், காணொலியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகத்திற்கு எந்தவிதமான புகார்களும் வரவில்லை என்ற பதிலை, ஒரே மாதிரி அவர்கள் இருவரும் தெரிவிக்கும் நிலையில், ஆசிரியர் ராஜகோபாலனின் கைபேசியை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி, ஆய்விற்கு உட்படுத்தி அதிலிருக்கும் தரவுகளை கைப்பற்றும் முயற்சியில் காவல் துறை தீவிரம் காட்டி வருகிறது.

ராஜகோபாலனுக்கு பள்ளியில் நண்பர்களாக இருக்கும் ஆசிரியர்கள் யார்- யார் என்பதை கண்டறிந்து அவர்களிடமும், இணையவழி வகுப்புகளை கண்காணிக்கும் பொறுப்பாளரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ’பெற்றோர்களே புரிந்துக்கொள்ளுங்கள்... இவ்வளவு தான் போக்சோ!’

Last Updated : May 28, 2021, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.