ETV Bharat / crime

சினிமா பாணியில் தண்ணி காட்டும் ’பப்ஜி’ மதன்! - மத்திய குற்றப்பிரிவு

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தப்பித்து வருவதால் பப்ஜி மதனை காவல் துறையினர் நெருங்குவதில் சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

பப்ஜி மதன்
பப்ஜி மதன்
author img

By

Published : Jun 15, 2021, 3:11 PM IST

சென்னை: பப்ஜி போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை வி.பி.என் சர்வரைப் பயன்படுத்தி நேரலையாக பதிவு செய்து வந்தவர் யூ டியூபர் மதன். இவரது சேனலுக்கு 9.5 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். பப்ஜி விளையாட்டின்போதே பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசி பதிவிடும் மதனுக்கு ஏராளமான சிறுவர்கள் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் பெண்கள், சிறுமிகளை தரக்குறைவான வார்த்தைகளால் ஆபாசமாகப் பேசி பப்ஜி போன்ற விளையாட்டு வீடியோக்களை யூடியூபர் மதன் வெளியிட்டு வருவது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.

இதனையடுத்து மதன் மீது நடவடிக்கை எடுக்க புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவினருக்கு இரண்டு புகார்கள் வந்தன. தொடர்ந்து, யூடியூபர் மதனை நேரில் ஆஜராகுமாறு காவல் துறையினர் சம்மன் அனுப்பிய போதும் அவர் ஆஜராகாத நிலையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்வதற்காக சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று வருகின்றனர்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோக்கள் அனைத்துமே ஆபாசமாக இருப்பதால், மதனின் யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும் விபிஎன் சர்வரை மதன் பயன்படுத்துவதால் டவர் லொகேஷனை கண்டறிவதில் காவல் துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மதனின் வசிப்பிடம் சேலம், பெருங்களத்தூரில் காண்பித்த நிலையில், அங்கு தேடியதில் அது போலியான லொகேஷன் எனத் தெரியவந்தது. மதன் தனது அடையாளங்களை மறைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் புகைப்படங்களை வைத்து அவரைக் கண்டறிவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மதன் மீது மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் மேலும் ஒரு புகார் வந்துள்ளதால், புளியந்தோப்பு சைபர் கிரைம், மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் இணைந்து யூடியூபர் மதனை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் தொழில்நுட்பத்தில் கைத்தேர்ந்தவராக இருப்பதால், ஆதரவற்றோருக்கு உதவி புரியக்கூடிய நபர்கள் பணம் செலுத்துவதற்காக மதனால் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கை வைத்து தேடும் முயற்சியிலும் தனிப்படை காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதாரண வழக்கை போல இல்லாமல் சினிமா பாணியில் தண்ணி காட்டும் மதனை பிடிப்பதற்கு காவல் துறையினர் பல யுக்திகளை கையாண்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கேமர் மதனின் யூ-ட்யூப் சேனலை முடக்க கடிதம் அனுப்பிய காவல் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.