ETV Bharat / crime

போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த பாதிரியார் கைது - செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.

போக்சோ வழக்கில் தேடப்பட்டுவந்த பாதிரியார் கைது

author img

By

Published : Sep 15, 2022, 9:21 AM IST

செங்கல்பட்டு: கல்பாக்கம் வயலூரை சேர்ந்தவர் பாதிரியார் சார்லஸ்(58). இவர் கல்பாக்கத்தில் கிறிஸ்துவ பிராட் டிரஸ்ட் என்ற விடுதியை 2012 முதல் 2018 வரை நடத்தி வந்துள்ளார்.

இவர் மீது கல்பாக்கம் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு ஒன்று உள்ளது. இவர் நடத்தி வரும் விடுதியில் தங்கி இருந்த சிறுமிக்கு பாதிரியார் சார்லஸ் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பத்மாவதி என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார், பாதிரியார் சார்லஸைத் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடமாகத் தலைமறைவாக இருந்து வந்த பாதிரியார் சார்லஸை நேற்று கோயம்பேட்டில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது மகளிர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் உதவியுடன் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக்கூறி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.