ETV Bharat / crime

பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி - ரவுடியை சுட்ட போலீஸ் - ரவுடி குருவி விஜய்

பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற ரவுடி குருவி விஜய் என்பவரை, காவல் துறையினர் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். மதுரையில் அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

madurai crime, madurai police fire, rowdy shoot, madurai police shoot, மதுரை குற்றம், ரவுடி சுட்டு பிடிப்பு, மதுரையில் பரபரப்பு, பெண்ணை பாலியல் வன்புணர்வு, ரவுடி குருவி விஜய், மதுரை அண்ணாநகர்
பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு
author img

By

Published : Nov 13, 2021, 8:21 AM IST

Updated : Nov 13, 2021, 11:02 AM IST

மதுரை: மதுரை அண்ணாநகர் செண்பகத்தோட்டம் மீனவர் சங்க கட்டடம் அருகே அதிகாலை பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி குருவி விஜய் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் கூச்சலிட்டுள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள், காவல் அவசர உதவி எண் 100க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்றனர்.

காவல் துறையினரைக் கண்டதும், குருவி விஜய்யும் அவரது கூட்டாளிகளும் காவலர்களை தாக்க முயன்றனர். தங்களை தற்காத்துக்கொள்ள காவல் துறையினர் ரவுடி குருவி விஜய்யின் காலில் சுட்டனர்.

தொடர்ந்து, ரவுடியுடன் அவரது கூட்டாளிகளையும் கைது செய்த காவல் துறையினர், காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், காலில் காயம்பட்ட நிலையில் ரவுடி குருவி விஜய் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரவுடியின் கூட்டாளிகளிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் மதுரை அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சிபிஐ கட்சிப் பிரமுகர் கொலை - 5 பேர் கைது

Last Updated : Nov 13, 2021, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.