ETV Bharat / crime

ஊரார் முன்னிலையில் அவமானப்படுத்திய அரசியல் பிரமுகர் - பழிக்குப் பழிவாங்கிய காவலர் - திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு

செய்யாறு அருகே ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஊரார் முன்னிலையில் தாக்கி அவமானப்படுத்திய உள்ளூர் அரசியல் பிரமுகரை கடத்திச்சென்று பாழடைந்த கட்டடத்தில் அடைத்துவைத்து அடித்த காவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

policeman who took revenge on the local politician
பழிக்கு பழிவாங்கிய காவலர்
author img

By

Published : Jan 14, 2022, 4:07 PM IST

திருவண்ணாமலை: செய்யாறு அருகே உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் செய்யாறு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கும் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரான திருமலை என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 11ஆம் தேதி காலை திருமலை மகாஜனம்பாக்கம் பெரும்புலிமேடு சாலையில் தனது நண்பருடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த காவலர் ராஜாராம் உள்ளிட்ட நான்கு கூட்டாளிகள் கொண்ட கும்பல் திருமலையை மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

கட்டிவைத்து வெளுத்த காவலர்

அதன் பின்னர் பாண்டியன்பாக்கம் தோப்பில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகின்றது. மேலும் கத்தியால் வெட்ட முயன்றபோது, சுதாரித்துக்கொண்ட திருமலை, அவர்களைத் தள்ளிவிட்டு தப்பியோடி சாலைக்கு வந்துள்ளார். அப்போது அவ்வழியாகச் சென்ற வாகனத்தில் ஏரி தூசி காவல் நிலையம் வந்து காவலர் ராஜாராம் தன்னை கடத்திச்சென்று தாக்கியது குறித்து புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் பேரில் காவலர் ராஜாராமை காவல் துறையினர் கைதுசெய்தனர். இக்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல்செய்து காவல் நிலையம் கொண்டுவந்தனர்.

ஆறு ஆண்டு பகைக்குப் பழிக்குப்பழி

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்துக்குப் பழி வாங்கியது தெரியவந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட திருமலை, ஊரார் மத்தியில் வைத்து காவலர் ராஜாராமை அடித்து விரட்டியதாகக் கூறப்படுகின்றது. ஒரு காவலராக இருந்தும்கூட தன்னால் எதுவும் முடியவில்லை. தன்னைத் தாக்கிய திருமலையைப் பழிவாங்காமல் ஊருக்குள் கால் எடுத்து வைக்கக் கூடாது என்ற சூளுரைத்திருந்தார் ராஜாராம்.

அதன்படி கடந்த ஆண்டு தன் சொந்த ஊருக்கு அருகில் உள்ள, செய்யாறு காவல் நிலையத்துக்கு கெஞ்சி கூத்தாடி பணி இடமாறுதல் வாங்கி வந்துள்ளார். திருமலையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து நோட்டமிட்ட ராஜாராம், காலையில் நடைபயிற்சிக்காக பக்கத்து ஊர்வரை வந்துசெல்வதைச் சுதாரித்துள்ளார்.

ஓடவிட்டு ரசித்த காவலர்

இதையடுத்து தனக்கு உடல் நிலை சரியில்லை என்று ஒரு மாதம் மருத்துவ விடுப்பு எடுத்த காவலர் ராஜாராம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருமலையை காரில் கடத்திச்சென்று பாழடைந்த கட்டடத்தில் வைத்து அடித்து தனது சூளுரையை நிறைவேற்றியுள்ளார்.

தனக்கு பயந்து திருமலை ஓடுவதைப் பார்த்து ரசிப்பதற்காக அவரை கொலை செய்வதுபோல கத்தியைக் காட்டி மிரட்டி விட்டியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவலர் ராஜாராம் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து, செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த காவலர் ராஜாராமின் கூட்டாளிகளான விஜயவேலு, ஜெகன்ராஜ், ஜெயக்குமார், பார்த்தசாரதி உள்ளிட்டோரையும் தூசி காவல் துறையினர் கைது நேற்று (ஜனவரி 13) செய்துள்ளனர். கடத்தல் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரனை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: நர்சிங் மாணவிக்குப் பாலியல் தொல்லை: பள்ளி மேலாளர், ஆசிரியர் கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.