பெரம்பலூர் 4 ரோடு பகுதி அருகே எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார், ஆறுமுகம். இவர் நேற்றிரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் எலக்ட்ரிக் கடை அருகே இருந்த டீக்கடையை இன்று (பிப்.27) அதிகாலை 5 மணி அளவில் திறக்க வந்துபோது, டீக்கடை மற்றும் அருகே இருந்த எலக்ட்ரிக்கல் கடை ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து உரிமையாளர் ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து கடையை பார்த்தபோது, கல்லாபெட்டி உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 5000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது எலக்ட்ரிக்கல் கடையில் வைத்திருந்த சிசிடிவி காட்சி மூலம் திருடனை அடையாளம் கண்டனர். பின் அதை அனைத்து காவலர்களுக்கும் செல்போன் மூலம் அனுப்பி வைத்தனர்.
அப்போது, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்குணம் பிரிவு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், திருடன் நடந்து செல்வதை கவனித்து, அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்பொழுது, அவர் கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி வயது 60 என்பதும் இவர் கடையில் திருடிய 5,000 ரூபாய் ரொக்கம் வைத்திருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பெரம்பலூர் பகுதியில் பல இடங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் இவருக்கு தொடர்புடையதா என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடு போன நான்கு மணிநேரத்தில் திருடனை கைது செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 'எத்தனை சம்பவம் பண்ணி இருக்கோம் தெரியுமா' - பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த கொள்ளையர்கள்!