ETV Bharat / crime

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் அவர்மீது இதுவரை 6 போக்சோ வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Sivasankar baba
Sivasankar baba
author img

By

Published : Nov 13, 2021, 2:48 PM IST

சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அந்தப் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மீது சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் 3 போக்சோ வழக்குகள் பதிவுச் செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கும், ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கும் பதிவுச் செய்யப்பட்டது.

ஏற்கனவே இவர் மீதான முதல் போக்சோ வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது போக்சோ வழக்குகளுக்கான குற்றப்பத்திரிகையும் முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில், தற்போது மேலும் அந்த பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது 5ஆவது போக்சோ வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் பதிவுச் செய்துள்ளனர். ஆக, சிவசங்கர் பாபா மீது 5 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா விவகாரம்: பக்தர்களின் போராட்டத்தால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.