விழுப்புரம் மாவட்டத்தைச்சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அம்மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றுவந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டிலேயே இன்று(ஆகஸ்ட்10) விஷம் அருந்திவிட்டு பள்ளிக்கு வந்து மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனை கொண்டு வந்துள்ளனர் .
அப்போது மாணவியின் உடலைப்பரிசோதித்த அரசு கல்லூரி மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
தற்போது மாணவியின் உடலானது முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மாணவிக்குத் திருமண ஏற்பாடு செய்ததாகவும்; ஆனால் மாணவி வேறு ஒருவரை காதலித்து வந்ததாகும் இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:கோச்சடையான் பட வழக்கு - லதா ரஜினிகாந்த் மீதான சில மோசடி குற்றச்சாட்டுகள் ரத்து!