ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகஸ்ட் 2ஆம் தேதியிலிருந்து பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்த சோதனைகள், ஷோபியான், அனந்த்நாக், பந்திபோரா உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன.
என்ஐஏ அலுவலர்களுடன், சிஆர்பிஎஃப் அலுவலர்களும் இணைந்துள்ளனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகள் தொடர்பாக இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. இதுவரை ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 40 இடங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சோதனை மேலும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விரைவில் ஒலிம்பிக் சாதனையை முறியடிப்பேன் - நீரஜ் சோப்ரா அதிரடி