ETV Bharat / crime

ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல், பீர் பாட்டில் உடைப்பு- மைசூருவில் காதலன் முன்னே காதலி கூட்டு பாலியல் வன்புணர்வு! - பாலியல் வன்புணர்வு

மைசூருவில், காதலனை தாக்கிவிட்டு, மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட இடத்தில் காவலர்கள் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

Mysore gang rape case
Mysore gang rape case
author img

By

Published : Aug 26, 2021, 3:49 PM IST

மைசூரு : மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில், எம்.பி.ஏ., படிக்கும் மாணவியை, அடையாளம் தெரியாத நபர்கள் கும்பலாக பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

இது கர்நாடகா மாநிலத்தையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மைசூரு நகரின் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாபுரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் எம்.பி.ஏ., படிக்கும் மாணவி, தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டு பேசி கொண்டிருந்த போது, ஆறு பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. ஆண் நண்பரை சரமாரியாக தாக்கிவிட்டு, அவர் முன்னிலையில், மாணவியை இழுத்துச் சென்று, கும்பலாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் மாணவி மயக்கம் கொள்ள, அவள் இறந்துவிட்டாள் எனக் கருதி அக்கும்பல் அங்கிருந்து தப்பித்துவிட்டது.

இந்நிலையில் சுயநினைவுக்கு வந்த இருவரும் இரவு அபயக்குரல் எழுப்பினர். மேலும் நடந்த சம்பவம் தொடர்பாக செல்போனில் தொடர்பு கொண்டும் தங்களது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு இரவு 10.30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “மைசூரு கூட்டு வன்புணர்வு சம்பவம் குறித்து மாணவியிடம் தகவல் பெறப்பட்டுள்ளது.

அதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று (ஆக.26) சம்பவ பகுதியில் ஏடிஜிபி பிரதாப் ரெட்டி விசாரணை நடத்தினார். இதற்கிடையில், மாணவியை சிறைபிடித்த ஆறு பேர் ரூ.3 லட்சம் கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர். அந்தப் பணத்தை மாணவி ஏற்பாடு செய்து தருகிறேன் எனக் கூறியுள்ளார்.

எனினும் அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில், அவளை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர் என்றும் கூறப்படுகிறது. மேலும், சம்பவ இடத்தில் பீர் பாட்டில்கள் உடைக்கப்பட்டு கண்ணாடி துகள்கள் சிதறிக் கிடந்துள்ளன. அந்த இடமே ஒரு மர்ம பிரதேசம் போல் காட்சியளித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலனஹள்ளி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கு மத்தியில் இவ்விவகாரத்தை தாமாக முன்வந்து தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்துகிறது. முதல்கட்ட விசாரணையின்போது மாணவியின் ஆண் நண்பர் மீதும் காவலர்களுக்கு சந்தேகம் வந்தது. ஏனெனில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.