ETV Bharat / crime

'குடும்பத் தகராறு' அக்கா கணவரை கோயிலில் கொலை செய்த நபர்

திருத்தணி அருகே முன்விரோதம் காரணமாக தன் அக்கா கணவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் திருத்தணியில் அரங்கேறியுள்ளது.

trl-murder
trl-murder
author img

By

Published : Jun 23, 2021, 7:26 AM IST

திருவள்ளூர்: திருத்தணி அக்கைய்ய நாயுடு இரண்டாவது டேங்க் தெருவைச் சேர்ந்த மொய்தீன் என்பவரின் மகன் ஜாகீர் உசேன்(28). இவர் சரண்யா(22) என்ற பெண்ணை மணமுடித்த நிலையில், இருவருக்கும் ஐந்து வயதில் லத்தீப் என்ற மகன் உள்ளார்.

2016ஆம் ஆண்டில் திருத்தணி அதிமுக., முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் கொலை செய்த வழக்கில் ஜாகீர் உசேனின் பெயரும் உள்ளது. மேலும், பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய இவர், இரு மாதங்களுக்கு முன்புதான் சிறையில் வெளியே வந்தார்.

மனைவி சரண்யாவுடன் வசித்துவந்த ஜாகீர் அப்போது மதுகுடித்தும், கஞ்சா அடித்தும் மனைவி சரண்யாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் சரண்யாவின் சகோதரர் குமரேசனுக்கு தெரியவர, குமரேசன் ஜாகீர் உசேனை பலமுறை கண்டித்துள்ளார்.

இதனால், குமரேசனுக்கும், ஜாகீர் உசேனுக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது.

கோயிலில் படுகொலை

இந்நிலையில், நேற்று (ஜூன் 22) காலை நகரின் பஜாரில் குமரேசன், ஜாகீர் உசேன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

மாலை, நான்கு மணியளவில் குமரேசன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் ஜாகீர் உசேனை ஸ்டாலின் நகர் உச்சிபிள்ளையார் கோயில் வளாகத்தில், கத்தியால் குத்திக்கொலை செய்தனர். ரத்தம் உறைந்து சம்பவ இடத்திலேயே ஜாகீர் உசேன் இறந்துள்ளார்.

கோயிலில் படுகொலை
கோயிலில் படுகொலை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், திருத்தணி துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குமரேசன் அவரது இரு நண்பர்களும் அரக்கோணம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். காவல் துறையினர் மூவரிடமும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பட்டா கத்தியை காட்டி மதுபானம் கொள்ளையடித்த கும்பல்: விரட்டிப் பிடித்த போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.