ETV Bharat / crime

யார் பெரிய தாதா என்ற மோதல்... ஒருவருக்கு கத்திக்குத்து, இருவர் கைது!

சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக ஒருவருக்கு கத்தி குத்து விழுந்தது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

கத்திக்குத்து
கத்திக்குத்து
author img

By

Published : Oct 18, 2021, 7:04 PM IST

Updated : Oct 18, 2021, 10:31 PM IST

சென்னை: வியாசர்பாடி சி கல்யாணபுரம் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் மணிமாறன் (20). இவர் பட்டரவாக்கத்தில் உள்ள டைல்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று (அக்.17) மதியம் இரண்டு மணி அளவில் வியாசர்பாடி சி கல்யாணபுரம் நான்காவது தெரு வழியாக இவர் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாகச் சென்ற இரண்டு இளைஞர்கள் கஞ்சா போதையில் மணிமாறனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மணிமாறணை குத்தியுள்ளனர். இதில் மணிமாறனுக்கு இடது கையிலும், மார்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர்

கைது

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வியாசர்பாடி, ரயில்வே யார்டு பகுதியில் பதுங்கியிருந்த வினோத்குமார் (24), அவிக்கி என்கின்ற மலாய் விக்கி (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

யார் பெரிய தாதா?

மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் மணிமாறனுக்கும் ஏற்கெனவே ஏரியாவில் யார் பெரிய தாதா என்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாகவும், அதனால் மணிமாறனை வெட்டுவதற்காக இவர்கள் வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர்

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி காவலர்கள், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கட்டிங்கை போட்டு சாவகாசமாகத் திருடிச் சென்ற திருடர்கள்

Last Updated : Oct 18, 2021, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.