ETV Bharat / crime

தம்பி மனைவி மீது சுடுதண்ணீரை ஊற்றிய அண்ணன் - சிசிடிவி வைரல்! - மதுரை குற்றம்

மேல பொன்னகரம் பகுதியில் தம்பி மனைவி முகத்தில் சுடு தண்ணீரை ஊற்றிய அண்ணனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

man poured hot water in sister in law face

author img

By

Published : Mar 17, 2021, 4:04 PM IST

மதுரை: தம்பி மனைவி முகத்தில் அண்ணன் சுடு தண்ணீரை ஊற்றிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மேல பொன்னகரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் மதுரை காந்தி பூங்காவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிவருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தீபலெட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் உள்ளனர்.

இச்சூழலில் ஜெயக்குமார் காதலித்து திருமணம் செய்துகொண்டதால் குடும்பத்தினர் பேசாமல் விரோதத்தோடு இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சொத்தை பிரித்துத் தரக்கோரி ஜெயக்குமார் தனது குடும்பத்தினர் மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்திவந்த நிலையில், நேற்று வழக்கம்போல ஜெயக்குமார் பணிக்குச் சென்றுவிட, வீட்டுத் திண்ணையில் தீபலெட்சுமி அமர்ந்திருந்தார்.

சற்றும் எதிர்பாராத நேரத்தில் சொத்துப் பிரச்னையை மனதில் வைத்துக்கொண்டு, திண்ணையில் அமர்ந்திருந்த தீபலெட்சுமியை ஜெயக்குமாரின் உறவினர்களான முத்து, கணேஷ்குமார், உதயகுமார், காமாட்சி, சுபா ஆகியோர் கட்டையால் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் கணேஷ்குமார் என்பவர் கொதித்துக்கொண்டிருந்த சூடான நீரை தீபலெட்சுமி முகத்தில் கொட்டியுள்ளார். இதில் காயமடைந்த தீபலெட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தம்பி மனைவி மீது சுடு தண்ணீரை ஊற்றிய அண்ணன் - சிசிடிவி வைரல்!

இச்சம்பவம் குறித்து தீபலெட்சுமியின் உறவினர்கள் கரிமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உறவினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பியின் மனைவி மீது அண்ணன் சொத்து தகராறில் சுடு தண்ணீரை ஊற்றுவது அவர்கள் வீட்டின் எதிரே இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.