நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு முன், சொந்த ஊருக்கு வந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில் சுரேஷ்குமாரின் முதுகு தண்டுவடத்தில் அடிபட்டுள்ளது. இதற்காக ஒன்றரை ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் வலி குறையாததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (மார்ச் 23) காலை தனது ஒன்றரை வயது ஆண் குழந்தை இனியவனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிபாளையம் வந்தவர், திடீரென காவிரி ஆற்றின் பாலத்திலிருந்து தனது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதியினர், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு சென்ற பள்ளிபாளையம் காவல் துறையினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி உயிரிழந்த சுரேஷ்குமார் மற்றும் குழந்தையை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நாவலூர் சுங்கச்சாவடியில் 80 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்!