சென்னை: அரும்பாக்கம் அசோக் நகர் பகுதியில் அடகு கடை நடத்தி வருபவர் ராகேஷ்(30). இவரின் கடைக்கு வந்த இரண்டு நபர்கள் ஆறு சவரன் தங்க சங்கலியை விற்க வேண்டும் என ராகேஷிடம் கொடுத்துள்ளனர்.
அதனை பார்த்து சந்தேகமடைந்த அவர், அருகில் இருக்கக்கூடிய நகைப்பட்டறையில் கொடுத்து சோதனை மேற்கொண்டபோது அது போலி என தெரியவர காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது..
பின்னர் அங்கு வந்த காவல் துறையினர், திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவரை பிடித்து சென்று கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சென்னையில் பல்வேறு இடங்களில் போலி தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றி பணம் வாங்கி சென்றதும் தெரியவந்துள்ளது. அவருடன் வந்த கஜேந்திரன் என்பவரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் திருவள்ளூர் விரைந்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக தகவல் தொழில்நுட்ப அணியை வலுப்படுத்துவேன் - மகேந்திரன்