திருவள்ளூர்: 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வெழுதி, முடிவுக்காக காத்திருந்த பார்த்தசாரதி என்பவர் , நடுகுத்தகை கிராமம் திருநின்றவூரைச் சேர்ந்த மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக சுற்றித்திரிந்த அரவிந்தை அணுகியுள்ளார்.
சில நாட்கள் கழித்து அரவிந்தன் பார்த்தசாரதியை செல்போனில் தொடர்புகொண்டு, "நீங்கள் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருகிறேன்" என்று ஆசை வார்த்தைக் கூறி பார்த்தசாரதியை நம்ப வைத்து அவரிடம் இருந்து சுமார் 4 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார்.
இதுதவிர பார்த்தசாரதிக்கு போலியான பணி நியமன ஆணை தயார் செய்த அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பிரத்தியேக தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு, இதுகுறித்து தகவல் தெரிவித்து போலி பணி நியமன ஆணைகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
கையில் குழந்தை... ரூ. 7 கோடி செலவு; எம்.எல்.ஏ மருமகனுக்கு எதிராக புகார்
உடனடியாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லில்லி தலைமையிலான காவல் துறையினர் சைபர் கிரைம் உதவியுடன் அரவிந்தனை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு செல்போன், இரண்டு சிம்கார்டுகள், போலி அரசு சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் பணியில் சேர அரவிந்தன் விண்ணப்பித்து இருந்ததாகவும், அது தொடர்பாக அவ்வப்போது மாவட்ட காவல் அலுவலகம் சென்றது தெரியவந்தது. அலுவலக ஊழியர்கள் சிலரிடம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்பழக்கத்தை பயன்படுத்தி காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக 10 பேரையும், வேறு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக 8 பேரையும் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
வெளிநாட்டில் மேற்படிப்பு - சீட் வாங்கித்தருவதாக ரூ.38 லட்சம் மோசடி
தொடர்ந்து, திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அரவிந்தனை முன்னிறுத்தி நிதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபோன்று வேறு யாரேனும் அரவிந்தால் பாதிக்கப்பட்டிருந்தால், காவல் துறைக்கு தகவல் அளிக்கலாம் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.