ETV Bharat / crime

ஃப்ரீ ஃபயர் கேமில் பழக்கம்... மதுரை சிறுமியை மகாராஷ்டிரா கூட்டிச் சென்ற வடமாநில இளைஞர் கைது

ஃப்ரீ பையர் கேம் மூலம் பழகி மதுரையை சிறுமியை, மகாராஷ்டிராவிற்கு அழைத்துச் சென்ற வடமாநில இளைஞரை ஏழு மாத தேடுதலுக்கு பின் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறுமியை பிரீ பையர் கேம் மூலம் பழகி அழைத்துச் சென்ற வடமாநில- வாலிபர் போக்சோவில் கைது

author img

By

Published : Jul 12, 2022, 7:43 AM IST

மதுரை: கடலூர் அடுத்து T.புடையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்னதாக மகாராஷ்டிராவின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள புதிய ரயில்வே காலனி பகுதிக்கு சென்று, அங்கு வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அங்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்த அவருக்கு, 22 வயதில் மகன் உள்ளார்.

2021ஆம் ஆண்டு, இந்த 22 வயது இளைஞருக்கும், மதுரை அருகே 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி (16) ஒருவருக்கும் ஃப்ரீ பையர் (Free Fire) கேம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் அந்த இளைஞருக்கும், அந்த சிறுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, அந்த இளைஞர், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 2021 டிசம்பர் 20ஆம் தேதி மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு சிறுமியை வரவைத்துள்ளார். மேலும், அங்கிருந்து தான் வசிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சிறுமியை அந்த இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த மகள் காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்தனர். சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர்.

மேலும், சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடுத்தனர். போலீசார் கண்டுபிடித்துவிட்டதை அறிந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி புனே நகரில் அந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.

சிறுமியை மதுரைக்கு அழைத்து வந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமி நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதனைதொடர்ந்து, தலைமறைவாகிய இளைஞரை போலீசார் தேடி வந்தனர். சிறுமி காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு, போக்சோ வழக்காக மாற்றப்பட்டது.

கடந்த 2 மாதங்களாக திருப்பரங்குன்றம் போலீசார் அந்த இளைஞரை தேடி வந்த நிலையில், சமீபத்தில் அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணை சோதனை செய்தபோது, அது மகாராஷ்டிராவின் ராஜ்கோட் பகுதியில் உள்ள புதிய ரயில்வே காலனியில் இருப்பதாக தெரிந்தது.

உடனடியாக திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் சுந்தரி தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார், மகாராஷ்டிரா சென்று சிறுமியை அந்த இளைஞரை நேற்று முன்தினம் (ஜூலை 10) கைது செய்தனர். மேலும், ஏழு மாத தேடுதலுக்கு பின்னர் பிடிப்பட்ட அந்த இளைஞரை நேற்று (ஜூலை 11) மதுரை அழைத்து வந்தனர். அந்த இளைஞரின் பெயர் செல்வா எனவும் தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் இல்லாததால் 8வயது சிறுவன் மடியில் 2வயது தம்பியின் சடலம்- மத்திய பிரதேசத்தில் சோக சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.