ETV Bharat / crime

கல்யாண் ஜுவல்லரியில் மோசடி: கிளை மேலாளர் கைது - சென்னை குற்றச்செய்திகள்

சென்னை கல்யாண் ஜுவல்லரி நகை கடையில் 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க சீட்டு மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அந்நிறுவன மேலாளர் பரணிதரன் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

Kalyan jewellery fraud case, kalyan Jewellery company manager Baranidharan arrested, கல்யாண் ஜுவல்லரி நிறுவன மேலாளர் பரணிதரன் கைது, சென்னை தி நகர் கல்யாண் ஜுவல்லரி
chennai T nagar kalyan Jewellery
author img

By

Published : Dec 19, 2021, 7:52 AM IST

சென்னை: வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர நகை சீட்டு விட்டு, அதிலிருந்து பல லட்சம் பணம் மற்றும் நகைகளை கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மேலாளரான பரணிதரன் கையாடல் செய்ததாக புகார் வந்தது.

கடந்த ஜூலை மாதம் தியாகராய நகரில் உள்ள கல்யாண் ஜுவல்லரி நகைக் கடையின் (பிரதான கிளை) மேலாளர் அனிஷ் என்பவர் தி.நகர் துணை ஆணையரிடம் இந்த புகாரை அளித்திருந்தார்.

இந்த வழக்கில், தலைமறைவறாக இருந்த பரணிதரன் என்பவரை பாண்டி பஜார் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 18 லட்சத்துக்கான நகை, பணம் மற்றும் தங்க நகை பில்களை காவல்துறையினர் கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குட்கா விற்ற 100 கடைகளுக்கு சீல் - சென்னை மாநகராட்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.