ETV Bharat / crime

இன்ஸ்டாவில் "டூயட்" ரீல்ஸ் பதிவிட்ட மனைவியை வெட்டிய கணவன் - Posting Duet Reels On Insta

சென்னையில் ஆண் நண்பருடன் இணைந்து இன்ஸ்டாவில் டூயட் ரீல்ஸ் வெளியிட்ட மனைவியை, கணவன் கத்தியால் சரமாகியாக தாக்கியுள்ளார்.

இன்ஸ்டாவில் டூயட் ரீல்ஸ் பதிவிட்ட மனைவியை வெட்டிய கணவன்

author img

By

Published : Oct 12, 2022, 3:37 PM IST

சென்னை: அயனாவரம் என்.எம்.கே தெருவை சேர்ந்தவர் சாலமன்(20). எலக்ட்ரீசியனான இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி(18) என்ற மனைவியும், 1 வயதில் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் ஈஸ்வரி இன்ஸ்டாகிராமில் தனக்கு தெரிந்த மனோ என்பவருடன் இணைந்து சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இதனை கண்டு கோபமடைந்த சாலமன் இதுகுறித்து நேற்று முந்தினம் (அக்.10) ஈஸ்வரியிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி திடீரென சாலமன் அருகிலிருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரியை கை மற்றும் தலையில் சரிமாகிய தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஈஸ்வரியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு - நடிகை பாபிலோனாவின் சகோதரருக்கு சிறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.