ETV Bharat / crime

பேஸ்புக்கில் மலர்ந்த காதலால் கற்பமான சிறுமி: ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

author img

By

Published : Jan 20, 2021, 3:33 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூரில் ஆசை வார்த்தை கூறி, 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஓட்டுநரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் மலர்ந்த காதலால் கற்பமான சிறுமி: ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!
பேஸ்புக்கில் மலர்ந்த காதலால் கற்பமான சிறுமி: ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், ஓசூர் அலசனத்தம் பகுதியில் குடியிருக்கும் கார் ஓட்டுநர் டேனியல் (22) என்பவருக்கும் ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக காதல் மலர்ந்துள்ளது. நாளடைவில் இருவரும் அடிக்கடி தனிமையாக சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் டேனியல், ஆசை வார்த்தைக் கூறி அந்த சிறுமியை வெளியில் அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல்நிலையில் மாற்றத்தை அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அழைத்து சென்று மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டத்தில் சிறுமி கர்ப்பமானது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் மாநகர மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து டேனியலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க...குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.