ஹரித்வார் : Haridwar hate speech: உத்தரகாண்டில் நடந்த மத நிகழ்ச்சியொன்றில் (Dharm Sansad) கலந்துகொண்ட மதத் தலைவர் நரசிங்கானந்த் (Narsinganand), ஆட்சேபத்துக்குரிய வகையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக சனிக்கிழமை (ஜன.15) கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான பேசிய வழக்கில் ஜிதேந்திர நாராயண் தியாகி என்ற வாசிம் ரிக்வி கைது செய்யப்பட்டு ஜன.13ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை விடுவிக்கக்கோரி சர்பானந்தா காட் பகுதியில் சிலர் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். இந்நிலையில், ஹரித்வார் 'தர்ம் சன்சாத்' நிகழ்ச்சியில் பேசிய நரசிங்கானந்த், இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்கள் ஆயுதங்களை பிரயோகிக்க வேண்டும் என்று பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரகாண்ட் மற்றும் டெல்லி போலீசுக்கு உத்தரவிட்ட நிலையில் மதத் தலைவர் நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நரசிங்கானந்த் தவிர மேலும் 10 பேரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வெறுப்பு பரப்புரை; முதலமைச்சர் தந்தைக்கு நீதிமன்ற காவல்!