ETV Bharat / crime

சென்னையில் பயங்கரம்- முன்னாள் நீதிபதி முன்னிலையில் காவலருக்கு கத்திக் குத்து - ஓய்வுபெற்ற நீதிபதி சிடி செல்வம் பாதுகாவலர் சக்திவேல் தாக்கப்பட்டார்

சென்னை அசோக் நகரில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலரிடம் மது போதையில் வந்த மூன்று பேர் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை கத்தியால் சராமரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

Retired Judge CD Selvam Guard Sakthivel got assaulted

author img

By

Published : Mar 22, 2022, 4:19 PM IST

சென்னை: புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சக்திவேல்(52). ஆயுதப்படை காவலரான இவர் ஓய்வுபெற்ற நீதிபதியும், காவலர்கள் நல வாரியத்தின் தலைவருமான சி.டி. செல்வம் என்பவருக்கு பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 22) காலை நீதிபதியுடன் காரில் அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அசோக் நகர் சிக்னல் ஹாட்சிப்ஸ் அருகே வரும் போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உடனே, சக்திவேல் காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சரிசெய்ய முன்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு கைமீறி சென்றதில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அசோக் நகர் காவல் துறையினர் படுகாயமடைந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தகவல் அறிந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவயிடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் அசோக் நகர் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மூன்று பேரை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.