ETV Bharat / crime

பூட்டிய வீட்டில் கைவரிசை - நாட்றம்பள்ளி அருகே 6 சவரன் நகை, கார் திருட்டு - நாட்றம்பள்ளி அருகே கார் திருட்டு

நாட்றம்பள்ளியில் நெடுஞ்சாலை அருகே சர்வீஸ் சாலையில் பூட்டிய வீட்டை உடைத்து பீரோவிலிருந்து 6 சவரன் நகை மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

பூட்டிய வீட்டில் கைரவரிசை
பூட்டிய வீட்டில் கைரவரிசை
author img

By

Published : Jul 10, 2021, 8:53 PM IST

திருப்பத்தூர்: வெலக்கல்நத்தம் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் 6 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வசித்துவருகிறார் காமாட்சி (42). இவருடைய மகன் கோவிந்தராஜ் (27) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பேக்கரி நடத்தி வருகிறார்.

இதனால் காமாட்சி ஹைதராபாத்திலுள்ள தனது மகன் வீட்டிலேயே பெரும்பாலும் வசித்து வந்துள்ளார். மாதம் இருமுறை மட்டும் வெலக்கல்நத்தில் உள்ள வீட்டுக்கு இருவரும் வந்து செல்வதாக கூறப்படுகிறது. காமாட்சிக்கு சொந்தமாக ஷிப்ட் கார் உள்ளது. அதை, அவரது மகன் கோவிந்தராஜ் ஓட்டி வந்துள்ளார்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இருந்து காமாட்சி தனது அண்ணன் திதிக்காக ரயில் மூலம் குப்பம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்து திதிக்கான பணிகள் அனைத்தையும் முடித்து உறவினரின் காரில் தனது வீட்டுக்கு மகன் கோவிந்தராஜூடன் இன்று (ஜூலை 10) காலை சென்றுள்ளார்.

அப்போது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் காணாமல் போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 சவரன் நகை திருடுபோயிருப்பது தெரியவந்தது.

பூட்டிய வீட்டில் நகை, கார் திருட்டு
பூட்டிய வீட்டில் நகை, கார் திருட்டு

இதைத்தொடர்ந்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் திருட்டு தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த காவல் துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: நிதி நிறுவன மோசடி - பாதிக்கப்பட்ட பெண் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.