திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி காவல்துறையின் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
சாமியார் வேடத்தில் இருவர்
அப்போது தமிழ்நாடு அரசு பேருந்தை சோதனையிட்டபோது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (33), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் (42) ஆகிய இரண்டு பேரும் சாமியாரை போன்று வேடமணிந்து பேருந்தில் இருந்துள்ளனர்.
இவர்கள் மீது சந்தேகமடைந்த காவலர்கள் அவர்களிடம் சோதைனையிட்டதில், நான்கு கிலோ கஞ்சாவைப் அவர்களிடம் இருந்து கைப்பற்றினர். இதன் பின்னர், இருவரின் மீது கும்மிடிப்பூண்டி பாதிரிவேடு காவல் துறை வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணைக்கு கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர். அவர்களிடம் காவலர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலால் கோவை மாணவி தற்கொலை; ஒருவர் கைது!