ETV Bharat / crime

உங்க போனுக்கு இந்த மாதிரி மேசேஜ் வருதா? ஜாக்கிரதையா இருங்க மக்களே! - வாடிக்கையாளர் பெயரில் கடன் வாங்கும் கும்பல்

ஆன்லைனில் வங்கிகளின் இணையதளத்தை போலியாக உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பெற்று, வாடிக்கையாளர்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் பணத்தை சைபர் கிரைம் கும்பல் சுருட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 10, 2023, 11:42 AM IST

சென்னை: வடமாநிலங்களை சேர்ந்த சைபர் கிரைம் கும்பல், வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை ஆன்லைன் மூலம் கொள்ளையடிப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் சென்னையை சேர்ந்தவர்களிடம் சைபர் கிரைம் கும்பல், நூதன முறையில் பணத்தை சுருட்டியுள்ளது. இதுதொடர்பாக சென்னை தென்மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பணத்தை பறிகொடுத்தவர்களில் பெரும்பாலோர் வழக்கறிஞர்கள், ஐடி நிறுவன பணியாளர்கள் எனவும் கூறப்படுகிறது.

ஆன்லைன் மோசடி குறித்து சென்னை தென்மண்டல சைபர் கிரைம் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், ஆன்லைனில் வேலை தேடுபவர்கள், வங்கியின் KYC (உங்கள் வாடிக்கையாளர்களை அறிவீர்களா?) தகவல்களை அப்டேட் செய்வர்களை குறிவைத்து இந்த மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட வங்கியின் இணையதள முகவரியை போலியாக உருவாக்கும் சைபர் கிரைம் கும்பல், KYC விவரங்களை அப்டேட் செய்யுமாறு, வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதை உறுதி செய்யும் வகையில், வங்கியில் இருந்து பேசுவதாக செல்போனிலும் தொடர்பு கொள்கின்றனர்.

இதையடுத்து வாடிக்கையாளர்கள் போலியான இணையதளத்தை தொடர்பு கொள்ளும் போது, அவர்களது அனைத்து தகவல்களையும் திருடி விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் பெயரில், அதே வங்கியில் ஆன்லைன் மூலம் பல லட்சத்தை கடனாக பெற்று அந்த பணத்தையும் சுருட்டி விடுகின்றனர்.

இந்த மோசடியால் சென்னை ஐஐடி ஊழியர் ரூ.1.5 லட்சம், ஐடி ஊழியர் ரூ.8 லட்சத்தை பறிகொடுத்துள்ளனர். வழக்கறிஞர் ஒருவரிடம் 25 லட்ச ரூபாயை திருடும் போது அவர் சுதாரித்துக் கொண்டு வங்கிக் கணக்கை முடக்கியதால், ரூ.10 லட்சம் பறிபோயுள்ளது.

முன்பெல்லாம், ஆன்லைன் மோசடியில் வங்கி சேமிப்பு பணத்தை திருடும் கும்பல், தற்போது தகவல்களை திருடி வாடிக்கையாளர் பெயரில் கடனை வாங்கி அதையும் கொள்ளையடித்து வருகின்றனர். இதுபோன்று மோசடி செய்யப்படும் கடன் பணத்துக்கான மாத தவணையை, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரே செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகம் கூறுவதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சைபர் கிரைம் கும்பல் மத்திய பிரதேச மாநிலம் ஜம்தாரவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ரவுடி கும்பல் தாக்கிய காவலர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.