கோவை மாவட்டம், சங்கனூர், நல்லாம்பாளையம் சாலையில் செல்வின் என்பவர் பழைய இரும்பு, மின்னணு சாதன கிடங்கு வைத்து நடத்தி வருகிறார். இங்கு ஐந்து ஊழியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், இன்று(பிப்.18) காலை 10 மணியளவில் ஊழியர்கள் வெளியே சென்ற நிலையில் கிடங்கில் இருந்து கரும்புகை வெளியானது.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒன்றரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இவ்விபத்தின் போது ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் ரூபாய்க்கும் மேலான இரும்பு, மின்னணு சாதனங்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழைய பொருள்கள் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதையும் படிங்க; நா வாங்குற சரக்க என் மனைவி குடித்து காலி பண்றா' கணவரின் குமுறல்!