ETV Bharat / crime

சென்னை விமானநிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்; 15 பேர் கைது - சுங்கத்துறை அதிகாரிகள்

சென்னை விமானநிலையத்தில், வெளிநாடுகளில் இருந்த கடத்தி வரப்படட் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இரு பெண்கள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை விமானநிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்

author img

By

Published : Nov 15, 2022, 6:57 AM IST

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் வருவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த 2 விமானங்களில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் எதுவும் இல்லை. தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்கத்தை கண்டுபிடித்தனர். 6 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 34 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 267 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் அபுதாபியில் இருந்து வந்த 2 விமானங்களில் பயணம் செய்த 2 பேரின் உள்ளாடைகளில் இருந்து ரூ.89 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 22 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்..

மேலும் துபாயில் இருந்து வந்த 4 பேரிடம் இருந்து 2 கிலோ 50 கிராம் தங்கமும், கொழும்பில் இருந்து வந்த 2 பெண்களிடம் இருந்து 730 கிராம் தங்க நகைகளும், பாங்காக்கில் இருந்து வந்த இளைஞரிடம் இருந்து 474 கிராம் தங்கமும் என ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 250 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

2 நாளில் நடத்திய சோதனைகளில் ரூ.4 கோடியே 68 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ 539 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 15 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்... கஞ்சா வியாபாரி கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.