சென்னை: தென் சென்னையின் பிரபல ரவுடியான சிடி மணி மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு போரூர் மேம்பாலம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது காவலர்கள் சுற்றிவளைத்ததாகவும், அப்போது காவலர்களைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயலும்போது சிடி மணியை கைதுசெய்ததாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், குண்டு துளைக்காத கார் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், மதுரையில் உள்ள தென்னந்தோப்பில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்துவந்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் சிடி மணியை சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வில்வித்தை வீரரின் மூக்கை அறுத்த நபர்: தேடுதல் வேட்டையில் காவல்துறை