ETV Bharat / crime

போன் பே வசூல் வேட்டை நடத்தி சிக்கிய ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்! - திண்டுக்கல் செய்திகள்

அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் காவல் துறையினருடன் சேர்ந்து வசூல் செய்த ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவர், நாளடைவில் தனியாக ஃபோன்-பே செயலி மூலம் கணக்கு தொடங்கி தனியாக வசூல் வேட்டை நடத்தியதால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

fake police, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், போலி காவலர், போன் பே, போன் பே வசூல், fake police phone pe collection, dindigul crime, திண்டுக்கல் குற்றம், திண்டுக்கல் செய்திகள், fake police arrested in dindigul
fake police arrested in dindigul
author img

By

Published : Apr 30, 2021, 12:28 PM IST

திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசாக வேலைபார்த்து வந்த தவமணி என்பவர் பணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் காக்கி பேண்ட் மட்டும் போட்டுக் கொண்டு உளவு பிரிவு காவலர் எனக் கூறி ஃபோன்-பே மூலம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள், திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடி, மாவட்ட எல்லைச் சோதனைச்சாவடி பள்ளப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் வாகனச் சோதனை செய்யும்போது காவல் துறையினருக்கு கையூட்டு வாங்கிக் கொடுக்கும் கையாளாக செயல்பட்டுவந்த தவமணி, முறைக்கேடான தொழில் செய்பவர்களிடம் இருந்தும் காவல்துறையினருக்கு வசூல் செய்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

கிடைக்கும் பணத்தில் காவல் அலுவலர்களுக்கு பங்கு

தினமும் வசூல் மூலம் பல ஆயிரங்கள் கையில் புழங்கினாலும் காவல் துறையினருக்கு பங்கு கொடுத்த பின்னர் தனக்கு 500 ரூபாயோ 1000 ரூபாயோ மட்டுமே கிடைத்ததால், காவலர்களுக்கே தெரியாமல் போன் பே மற்றும் கூகுல் பே போன்ற கைபேசிசெயலி வழியாக இணைய பணபரிவர்த்தனை மூலம் தனது கணக்கிற்கு நேரடியாக 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வசூல் செய்து வந்துள்ளார்.

இத்தகவல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே காவல் நிலைய ஆய்வாளருக்கு தெரிய வந்ததோடு அவர்களது மாத வசூல் பாதிப்படைந்ததால் தவமணியை காவல்நிலைய பகுதிகுள்ளே வரக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகின்றது.

தேர்தல் வந்ததும் ஆய்வாளர்களும், சில காவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளாக அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரமிக்க காவலர்களின் உதவியோடு மீண்டும் களத்தில் குதித்த தவமணி பகிரங்கமாக செயலி மூலம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சிக்கியது எப்படி

இவ்வேளையில், திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளப்பட்டி சோதனைச்சாவடி பகுதியில் சிவகாசியிலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு அட்டைப்பெட்டி ஏற்றிச்சென்ற லாரியை மடக்கியுள்ளார். லாரி ஓட்டுநர் சித்திக்கிடம் தன்னை உளவுப்பிரிவு காவலர் எனக் கூறி அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்துள்ளார்.

எல்லா ஆவணங்களும் சரியாக இருந்த நிலையில், போதையில் வாகனம் ஓட்டி வருவதால் 5,000 ரூபாய் அபராதம் கட்டவேண்டும் எனக் கேட்டுள்ளார். தான் மது அருந்தவில்லை என அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் ரூ.5,000 கொடுத்தால் தான் விடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார் தவமணி.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என மறுத்த போதும் விடாத தவமணி, தனது ஃபோன்-பே கணக்கில் கைபேசி வழியாக பணம் செலுத்தச்சொல்லி கட்டாயப்படுத்தியதால், லாரி ஓட்டுநர் சித்திக், தவமணியின் போன்-பே எண்ணிற்கு பணத்தை அனுப்பிவிட்டு நடந்தவற்றை தனது கைபேசியில் மூலம் படம்பித்துள்ளார்.

முடிவுக்கு வந்த வேட்டை மன்னனின் விளையாடுகள்

தனக்கு நேர்ந்த இக்கட்டான வசூல் கொடுமை வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது என்று ஆதாரங்களுடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியாவிடம் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இறங்கிய தனிப்படையினர், தவமணியின் சேட்டைகள் குறித்து பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்ததால் அவரின் கைபேசியை பறிமுதல் செய்து, தவமணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காவல் துறையினர் துணையின்றி ஒரு ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் எப்படி தனியாக கட்டாய வசூலில் ஈடுபட முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், தவமணியுடன் தொடர்புள்ள காவல் அலுவலர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகின்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.