விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக டிஐஜி தனிப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின்பேரில் எஸ்பி பெருமாள் உத்தரவின்பேரில், இராஜபாளையம் துணை காவல்கண்காணிப்பாளர்
நாகசங்கர் அறிவுறுத்தலின்படி, இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தெய்வம் தலைமையிலான காவல்துறையினர் இராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, புல்லுக்கடை தெருவைச் சேர்ந்த பட்டியக்காரன் மகன் முரளி ( வயது 67 ) என்பவரிடமிருந்து எட்டரை கிலோ கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் மொத்த வியாபாரம் செய்வதாக மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னகட்டளை பகுதியை சேர்ந்த குருசாமி மகன் சிவசாமி (வயது 54 ) இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் கலாசார தாக்குதல் நடத்துகிறது பாஜக' - ஸ்டாலின்