ETV Bharat / crime

குடிபோதையில் தகராறு - தம்பியை கொலை செய்த அண்ணன் கைது - தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன்

சென்னை: குடிபோதையில் தகராறு ஏற்பட்ட நிலையில், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

man killed his brother
குடிபோதையில் தம்பியை கொலை செய்த அண்ணன்
author img

By

Published : Mar 31, 2021, 8:24 AM IST

சென்னை அரும்பாக்கம் ராசா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (எ) இருதயம் (30). இவர் அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி அருகே செருப்பு தைக்கும் கடை நடத்திவருகிறார்.

நேற்று (மார்ச் 30) மாலை ஆனந்துக்கும் அவரது தம்பி லூர்துசாமி (28) என்பவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு எழுந்துள்ளது. இதன் காரணமாக லூர்துசாமியை, அண்ணன் ஆனந்த் செருப்பு தைக்கும் கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த லூர்துசாமி, அதிக ரத்த போக்கின் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'சரக்கு பாட்டில எலி தூக்கிட்டுப் போயிடுச்சு' - சினிமாவை மிஞ்சிய காவலரின் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.