சென்னையில் காவல் உயர் அலுவலர் ஒருவர் பெண் உயர் அலுவலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில், 6 பேர் அடங்கிய விசாரணை கமிட்டியை, தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட காவல் உதவி அலுவலரின் பதவி பறிக்கப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பெண் எஸ்பிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரை, சிபிசிஐடிக்கு மாற்றி விசாரணை நடத்த தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு இருந்தார்.
இதுகுறித்து சிபிசிஐடி காவலர்கள் சம்பந்தப்பட்ட காவல் உயர் அலுவலர் மீது சட்டப்பிரிவு 354 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை, புகார் கொடுக்க விடாமல் தடுத்த எஸ்.பி மீதும், மேற்கண்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் எஸ்பி புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கையில் மேலும் சில அலுவலர்களின் பெயர்களையும் சேர்க்க இருப்பதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ரூ.10லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்!