ETV Bharat / crime

இது சென்னை புறநகரா அல்லது கொள்ளை நகரா ? - தொடரும் குற்றச்செயல்கள் - சென்னை குற்றச்செய்திகள்

பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லையில் தொடர்ந்து அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களால் அப்பகுதியே அச்சத்தில் முடங்கியுள்ளது என காவல்த்துறை நடவடிக்கை என்ன?

பீர்க்கன்காரணை காவல் நிலையம்
பீர்க்கன்காரணை காவல் நிலையம்
author img

By

Published : Mar 3, 2022, 8:01 AM IST

சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து கொள்ளை, செயின் பறிப்பு, இருசக்கர வாகனம் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேரிவரும் நிலையில், காவல் துறையினர் அனைத்து பகுதிகளுக்கும் ரோந்துப் பணியில் ஈடுபடவில்லை எனவும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை துரிதமாக செயல்பட்டு உடனடியாக கைது செய்யவில்லை எனவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பீர்க்கன்காரணை காவல் நிலையம்
பீர்க்கன்காரணை காவல் நிலையம்

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் பீர்க்கன்காரனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி உள்ள நிலையில், காவல்துறையின் நடவடிக்கை கேள்விக்குறியாக உள்ளது. ஆலப்பாக்கம் பேராசிரியர் தெருவில் மெக்கானிக் வேலை செய்துவரும் ஆறுமுகம் என்பவரின் வீட்டில் ஆள் இல்லாதபோது அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து, பீர்க்கன்காரனை காவல்நிலையத்தில் ஆறுமுகம் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடி தப்பிச்செல்வது தெரியவந்தது. இதன்மூலம், காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், நெடுங்குன்றம் தேவராஜன் நகரில் வசித்து வரும் அன்பழகன் என்பவர் வெளியூரில் இருக்கும் அவரது மனைவியை பார்ப்பதற்கு சென்றிருந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து 32 இன்ச் எல்.இ.டி டிவி, விலை உயர்ந்த மடிக்கணினி, மிக்ஸி, பீரோவில் வைத்திருந்த பட்டுப்புடவைகள், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், வெள்ளி பொருள்கள் ஆகியவை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், புது பெருங்களத்தூர் பகுதியில் முத்து கருப்புசாமி என்பவருக்கு சொந்தமான துணிக்கடையில் பூட்டை உடைத்து விலை உயர்ந்த பட்டுப்புடவைகள், 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, முடிச்சூர் லஷ்மி நகர் பகுதியைச் சேர்ந்த பிரேமா (60) தாம்பரம் பேருந்து நிலையத்தில், பழ வியாபாரம் செய்துவரும் இவர் நேற்று முன்தினம் இரவு (பிப். 28) வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் அருகே உள்ள கடை ஒன்றில் இட்லி மாவு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் பிரேமா கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க தாலிச் சங்கிலியை திடீரென பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பீர்க்கங்கரணை காவல்துறையினர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மக்களைத் தேடி வருகின்றனர்.

பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை அடையாளம் தெரியாத நபர்கள் குறிவைத்து தொடர்ந்து அரங்கேறி வரும் செயின் பறிப்பு, கொள்ளைகள், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களால் அப்பகுதியே அச்சத்தில் முடங்கியுள்ளது. இதேநிலை, தொடர்ந்தால் அப்பகுதியே குற்றச் சம்பவத்தின் கூடாரமாக மாறிவிடும் எனவும், மேலும் இதற்கு முன்பு நடந்த கொள்ளைச் சம்பவங்கள் குறித்தும் காவல் துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தாம்பரம் காவல் ஆணையர் ரவி உடனடியாக பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவுடன் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு காவலர்களை ஈடுபடுத்தவும் உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கொலை வழக்கு - 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.