ETV Bharat / crime

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து பல கோடி ரூபாய் மோசடி..

அதிக வட்டி தருவதாக கூறி, சுமார் ஒரு லட்சம் பேரிடம், கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து மோசடி செய்த நிதி நிறுவனம் மீது பாதிக்கப்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஏமாற்றிய நிறுவனத்தின் மீது புகாரளிக்க கூடிய பொதுமக்கள்
மோசடி
author img

By

Published : Nov 4, 2022, 11:07 AM IST

Updated : Nov 4, 2022, 2:59 PM IST

சென்னை: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம், இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ், எல்வின் போன்ற நிறுவனங்கள் பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் வசூல் செய்து, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஹிஜாவு குழுமம் என்ற நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி, கடந்த நான்கு வருடத்திற்கும் மேலாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு மாதம் கொடுக்க வேண்டிய வட்டி வராததால் முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்களை அணுகியுள்ளனர். இந்தக் குழுமத்தின் தலைவராக சௌந்தர்ராஜன் மற்றும் நிர்வாக இயக்குனரான அவரது மகன் அலெக்சாண்டர் மற்றும் பல நிர்வாகிகள் சேர்ந்து பொதுமக்களிடம் தமிழகம் முழுவதும் பணத்தை வசூல் செய்துள்ளனர்.

முதற்கட்டமாக வசூல் செய்யும் பொழுது பணத்தைப் பெற்றவர்களிடம் 15% வட்டி தருவதாக ஆவணங்கள் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். இந்த நிறுவனம் www.mypayhm.com என்ற இணையதளத்தின் மூலம் உறுப்பினர் எண் கொடுத்து, ஆன்லைன் மூலமாக உறுப்பினர்களையும், அவர்கள் கணக்குகளையும் கையாண்டு வந்துள்ளனர். இந்த இணையதளத்தின் மூலம் எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது, மாதம் எவ்வளவு வட்டி வருகிறது உள்ளிட்ட தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

நிறுவனங்களில் பலர் முதலீடு செய்ய ஆரம்பித்தவுடன், பெரும்பாலானோர் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக எண்ணெய் கிணறுகள் துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வைத்திருப்பதாகவும் அதில் வசூல் செய்யப்பட்ட பணத்தை முதலீடு செய்து லாபம் பெறுவதாகவும் கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பலரிடமும் பணத்தை நேரடியாகவும் ரொக்கமாக மட்டுமே வசூல் செய்து வட்டியையும் ரொக்கமாகவே கையில் கொடுத்துள்ளனர். வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட பணம் வருவதற்கு காலதாமதம் ஆவதால் வட்டி பணம் கொடுப்பதற்கு ஆறு மாத கால அவகாசம் கேட்டதாக முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்பும் பணத்தை தராததால் பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கான பேர் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்க கூடினர். மோசடி செய்யப்பட்ட தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளனர்.

முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஏமாற்றிய நிறுவனத்தின் மீது புகாரளிக்க கூடிய பொதுமக்கள்

இந்த நிறுவனத்தில் ஆட்கள் சேர்ப்பவர்களுக்கு மாதந்தோறும் கமிஷன் தொகையும் கொடுக்கப்படுகிறது. முதலீடு செய்த பலரும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பலரையும் இந்த நிறுவனத்தில் சேர்த்துள்ளனர். இதில் சிலர் முகவர்கள் போல் செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து கொடுத்த நபர்களும் உள்ளனர். அவ்வாறு பணம் வசூல் செய்து கொடுத்தவர்களில் சிலர் புகார் அளிக்க வந்த நூற்றுக்கணக்கான மக்களோடு சேர்ந்து புகார் அளிக்க வரும்போது சிக்கிக்கொண்டனர்.

அதுபோன்று பணம் வசூல் செய்து கொடுத்த முகவர்களை முற்றுகையிட்டு பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து பல மணி நேரமாக பணத்தை முதலீடு செய்தவர்கள் திரண்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்களில் சிலரை மட்டும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைத்து புகார்களை பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: ரயில் மீது கல்வீசி தாக்கியவர் கைது

Last Updated : Nov 4, 2022, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.