வேலூர்: குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டி மொத்தமாரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த கௌதம் (21). இவர், குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவருகிறார்.
இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை கௌதம் கடத்தியதாக, அந்த மாணவியின் தந்தை மேல்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், மேல்பட்டி காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்தநிலையில் நேற்று (ஜூன் 25) கௌதமை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.