ETV Bharat / crime

ஓய்வுபெற்ற உதவி ஆணையரின் மனைவியிடம்  5 சவரன் நகை பறிப்பு - சென்னை குற்றம்

சென்னை அரும்பாக்கத்தில் ஓய்வுபெற்ற உதவி ஆணையரின் மனைவியிடம் இருந்து 5 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

chain snatched from retired dsp wife in chennai

author img

By

Published : Sep 17, 2021, 7:33 AM IST

சென்னை: ஓய்வுபெற்ற காவல் உயர் அலுவலரின் மனைவியிடம் அடையாளம் தெரியாத நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரும்பாக்கம் ஜானகி ராமன் காலணியைச் சேர்ந்தவர் சுதாகர் (61). இவர், காவல்துறையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், சுதாகரின் மனைவியான சாந்தி, நேற்று (செப். 16) காலை நியாய விலை கடைக்கு செல்ல, அரும்பாக்கம் காந்தி தெரு ஜகனாதன் நகர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

Also read: முன்னாள் அமைச்சர் வீட்டில் அள்ள அள்ள குறையாத பணம்!

அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையைப் பறித்துத் தப்பிச் சென்றனர்.

இது குறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் அரும்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.