ETV Bharat / crime

நடை பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு - chennai crime

சென்னை அண்ணா நகரில் நடை பயிற்சி மேற்கொண்ட 62 வயது மூதாட்டியிடம் 7 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

chain snatch in chennai
chain snatch in chennai
author img

By

Published : Aug 16, 2021, 6:13 AM IST

சென்னை: அண்ணா நகரில் நடை பயிற்சி மேற்கொண்ட 62 வயது மூதாட்டியிடம் 7 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி (62). இவர் நேற்று அவரின் வீட்டின் அருகே நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். இதை நோட்டமிட்ட 2 அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து மூதாட்டி விசாலாட்சியை இடித்து கீழே தள்ளியுள்ளனர்.

பின்னர் இருசக்கர வாகனத்தின் பின்னால் இருந்த நபர் அவரை காப்பாற்றுவதுபோல நடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலி செயினை அறுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து விசாலாட்சி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.