ETV Bharat / crime

பல கோடி வங்கி மோசடி விவகாரம்: சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் பங்குதாரர்கள் மீது சிபிஐ வழக்கு

author img

By

Published : May 7, 2022, 11:39 AM IST

வங்கி மோசடி விவகாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ்
சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ்

சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இந்தியன் வங்கியில் தலைமை நிர்வாகி கே.எல் குப்தா, சிபிஐயிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் மற்றும் அதன் பங்குதாரர்கள் சுஜாதா, ஒய்.பி ஸ்ரவன், பெயர் குறிப்பிடப்படாத அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.

ஓராண்டில் இரண்டு கடன்: அந்தப் புகாரில், "2017ஆம் ஆண்டு கமர்சியல் ஷோரூம் வாங்குவதற்காக 150 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. மேலும், அதே ஆண்டில் 90 கோடி ரூபாய் கடனையும் வாங்கினர். இந்த கடன் தொடர்பான சொத்துக்களை வங்கிக்கு தெரியாமல் மாற்றியதும், இரண்டாவதாக பெறப்பட்ட 90 கோடி ரூபாய் கடன் மூலம், கமர்சியல் ஷோரூம் வாங்க பெற்ற கடனை அடைக்க முயற்சி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

முறைகேடும்... வாராக்கடனும்: குறிப்பாக, வங்கியில் கடன் பெற கூறப்பட்ட காரணங்களுக்காக அதை பயன்படுத்தாமல், முறைகேடாக வேறு விவகாரங்களுக்கு முதலீடு செய்து முறைகேடு செய்ததும், பல்வேறு விதிமுறைகள் மீறியதும் வங்கியால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம், இந்தியன் வங்கிக்கு 312 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் முறைகேட்டில் ஈடுபட்டனர். வாங்கப்பட்ட கடனுக்கு வட்டியை முறையாக செலுத்தாததால் வாராக்கடனாகவும் அறிவிக்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளனர்.

வங்கி அதிகாரிகளும் உடந்தை: இதன்மூலம், வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் மற்றும் பங்குதாரர்கள் சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த இந்தியன் வங்கியின் தலைமை மேலாளர் செல்வம் மற்றும் துணை பொது மேலாளர் தமிழரசு ஆகியோர் மீது இந்தியன் வங்கி நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

பல்லக்கு துரை விடுவிப்பு: குறிப்பாக, சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் ஆகிய இருவரும் சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் உரிமையாளரான மறைந்த பல்லக்கு துரையின் மனைவி மற்றும் மகன் ஆவார். சிபிஐயிடம் பல்லக்கு துரையின் மீதும் இந்தியன் வங்கி புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த வருடம் பல்லக்கு துரை உயிரிழந்த காரணத்தினால் வழக்கில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

கரூர் வைசியா வங்கியிலும் முறைகேடு: இந்தியன் வங்கியிடம் கடன் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் சுமார் 400 கோடி ரூபாயை கடன் தாண்டியதால் கடந்த ஜனவரி மாதம் தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர் கோல்டு பேலசை எழும்பூர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்தியன் வங்கி ஜப்தி செய்தது நினைவுக்கூரத்தக்கது. மேலும், கரூர் வைசியா வங்கியிலும் சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ், அதன் நிர்வாகிகள் 162 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.